பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கிய பங்காற்றியவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி புகழாரம்
பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காகக் குறிப்பிடத் தக்க முயற்சிகளை எடுத்தவர் ஜெயலலிதா எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது படத்துடன் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் சார்ந்த கொள்கைகளைச் செயல்படுத்தி, அடித்தட்டு மக்களுக்கு அதிகாரமளித்ததற்காக ஜெயலலிதா பரவலாகப் போற்றப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக ஜெயலலிதா குறிப்பிடத் தக்க முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவுடனான கலந்துரையாடல்கள் தன் மனத்தில் நீங்காமல் இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Comments