முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்: அதிமுக, அமமுகவினர் இடையே மோதல்

0 3482

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தஞ்சையில் அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது, கொடி கட்டுவது உள்ளிட்டவற்றில் அதிமுக, அமமுகவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

ரயில் நிலையம் அருகிலுள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அங்கு அதிமுகவினர் கொடிகட்டி அண்ணா சிலையிலிருந்து பேரணியாக வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதற்குள் அங்கு மாலை அணிவிக்க வந்த அமமுகவினர் தங்களது கொடிகளையும் கட்டியதாக சொல்லப்படுகிறது. அதிமுகவினர், அமமுகவினரின் கொடிகளை அகற்றி தூக்கி எறிந்ததால் அப்பகுதியில் லேசான பதற்றம் நிலவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments