மும்பையை கலக்கும் சூப்பர் ஸ்டார் தோசை..!

0 1950

மும்பையின் சாலையோர கடையில் முதியவரின் ”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைல் தோசை” இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை தாத்ரா பகுதியில் உள்ளது முத்து தோசை கார்னர். சாலையோர கடையான இந்த உணவகத்தில் அதன் உரிமயாளரான முத்து தயாரிக்கும் தோசை அப்பகுதியில் மட்டுமின்றி இணையத்திலும் பிரபலமடைந்து வருகிறது. தென்னிந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் தான் முத்து. ரஜினியின் ஸ்டைலால் கவரப்பட்ட முத்து தனது தொழிலிலும் ரஜினியை போலவே ஸ்டைலை காட்டி கடைக்கு சாப்பிட வருவோரை கவர்ந்து வருகிறார்.

வயதான போதிலும், ஒரே நேரத்தில் ஐந்து தோசைகளை தயாரித்து அதை ஒன்றன்பின் ஒன்றாக குறிப்பிட்ட வேகத்தில் வாடிக்கையாளர்கள் கைக்கு முத்து அனுப்பும் ஸ்டைலால், “ ரஜினிகாந்த் ஸ்டைல் தோசை” என்ற பெயர் அப்பகுதியில் பிரபலமடைந்து வருகிறது. கன நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அடுத்தடுத்த தோசைகளை தயாரிக்கும் முத்துவின் வேகம் அவரது தொழில் அனுபவத்தையும், நேர்த்தியையும் வெளிப்படுத்துகிறது.

முத்து தோசை தயாரிக்கும் ஸ்டைலும், வேகமும் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோசைக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. இதற்கு முன்னதாக அதே மும்பை நகரில் தான் பறக்கும் தோசை இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வைரலானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments