டெல்லியில் கொரோனா பரவலைத் தடுக்க மகாராஷ்டிரம், கேரளம் உட்பட 5 மாநிலங்களில் இருந்து வருவோருக்குக் கட்டுப்பாடு

0 4716
டெல்லியில் கொரோனா பரவலைத் தடுக்க மகாராஷ்டிரம், கேரளம் உட்பட 5 மாநிலங்களில் இருந்து வருவோருக்குக் கட்டுப்பாடு

டெல்லியில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து வருவோர் கொரோனா தொற்று இல்லை எனச் சான்றுபெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், கேரளம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அதிகம் பரவல் உள்ள ஐந்து மாநிலங்களில் இருந்து ரயில்கள், விமானங்கள், பேருந்துகளில் வருவோர் கொரோனா தொற்று இல்லை எனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு பிப்ரவரி 26 முதல் மார்ச் 15 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments