ஃபாஸ்டாக் முறைக்கு மாறிய பின்னரும் காத்திருப்பு தொடர்கிறதா? சுங்கச்சாவடிகளில் புதிய முறை

0 4999
ஃபாஸ்டாக் முறைக்கு மாறிய பின்னரும் காத்திருப்பு தொடர்கிறதா? சுங்கச்சாவடிகளில் புதிய முறை

தேசிய நெடுஞ்சாலை சுங்சாவடிகளில் ஃபாஸ்டாக் கட்டண முறை கட்டாயமாக்கப்பட்ட பின்னரும், வாகனங்கள் நீண்ட நேரம் தேங்குவதை தவிர்க்க மத்திய அரசு புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.

அதன்படி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், தனித்து அடையாளம் காணப்படும் வகையிலான கோடு ஒன்று வரையப்படும். இந்த கோட்டையும் தாண்டி காத்திருக்கும் வாகனங்களின் வரிசை நீண்டால், உடனடியாக சுங்கசாவடியின் தடுப்பு திறக்கப்பட்டு காத்திருக்கும் அனைத்து வாகனங்களும் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தால் ஃபாஸ்டாக் கட்டாயமாக்கப்பட்ட பின்னர் சுங்கச்சாவடிகளின் ரியல்டைம் நடைமுறைகள் ஆன்லைனில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஃபாஸ்ட்டாக் நடைமுறைக்கு மாறிய பின்னரும், தாங்கள் நீண்ட நேரம் சுங்கச்சாவடி வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஏராளமான வாகன ஓட்டிகளும், உரிமையாளர்களும் புகார் அனுப்பினர்.

இதைத் தொடர்ந்து இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments