திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் டூல் கிட் வழக்கில் கைதான திஷா ரவி

0 3686
திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் டூல் கிட் வழக்கில் கைதான திஷா ரவி

டெல்லி உயர்நீதிமன்றம் டூல்கிட் வழக்கில் இளம் பெண் திஷா ரவிக்கு ஜாமீன் அளித்ததையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.

22 வயதான சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி வன்முறையைத் தூண்டியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது தேச துரோக குற்றமாகாது என்று பாட்டியாலா செசன்ஸ் நீதிமன்றம் தெளிவுபடுத்தி திஷா ரவிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.

கடந்த பிப்ரவரி 15ம்தேதி பெங்களூரில் கைது செய்யப்பட்ட திஷா ரவி டெல்லி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments