செவ்வாய் கிரகத்தில் பேரிரைச்சலுடன் இறங்கியது பெர்சிவரன்ஸ்!

0 22405
பேரிரைச்சலுடன் இறங்கியது பெர்சிவரன்ஸ்

பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் வீடியோவை அமெரிக்க விண்வெளி மையமான நாசா வெளியிட்டுள்ளது.

கடந்த 18ம் தேதி செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து மணிக்கு 12 ஆயிரம் மைல் வேகத்தில் இறங்கிய ஆய்வூர்தி தரையிறங்கியது. அதிவேகமாகச் செல்லும் கோள வடிவ ஊர்தியில் இருந்து, அதன் வேகத்தை கட்டுப்படுத்த 70 அடி விட்டமுள்ள பாராசூட் விரியும் பிரமிக்க வைக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இறுதியில் ஆறு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள ரோவர் செவ்வாயில் உள்ள ஜெஸரோ கிரேட்டர் என்ற பள்ளத்தில் இறங்குகிறது. அப்போது, பள்ளத்தாக்கில் மணல் விசிறியடிப்பதும் கேமராவில் பதிவாகி உள்ளது. 7 நிமிட பரபரப்பான பயணத்தின் வீடியோ சுருக்கக் காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments