எதிரி நாடுகளின் செயற்கைக்கோள் தாக்குதலை தடுப்பதற்கான தொழில்நுட்பம் வடிவமைப்பு பணியை தொடங்கிய இந்தியாவின் விண்வெளி பாதுகாப்பு முகமை
எதிரி நாடுகளின் செயற்கைக்கோள் தாக்குதலை தடுப்பதற்கான தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் பணியை, இந்திய விண்வெளி பாதுகாப்பு முகமை தொடங்கியுள்ளது.
விண்வெளியில் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்படும் செயற்கைக்கோள்களை சில நாடுகள் தவறாக பயன்படுத்தி, டிஜிட்டல் தாக்குதல் நடத்துகின்றன.
இவ்வாறு,தாக்குதல் நடத்தும் எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களைக் கண்டறிந்து, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம், தாக்கி அழிக்கும் திட்டத்தை, "மிஷன் சக்தி" என்ற தலைப்பில், இந்தியாவும் முன்னெடுத்துள்ளது.
இந்த மிஷன் சக்தி திட்டத்திற்கு உயிரூட்டும் பணிகளை முன்னெடுத்துள்ள இந்தியாவின் விண்வெளி பாதுகாப்பு முகமை, எதிரி செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
Comments