ஏழைகளுக்கு உதவும் புதிய காப்பீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

0 2698
ஏழைகளுக்கு உதவும் புதிய காப்பீடு

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதில், 55 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், புதிய அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் 2 லட்ச ரூபாயும், விபத்தில் மரணம் அடைந்தால், 4 லட்ச ரூபாயும் காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுக்கான தொகையை தமிழக அரசே ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயிர் கடன் தள்ளுபடிக்கு 5 ஆயிரம் கோடி ரூபாயும், பயிர் காப்பீடு திட்டத்திற்கு 1738 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு 13,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் 2000 மின்சாரப் பேருந்துகள் உட்பட, 12,000 பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறைக்கு 623 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments