அமெரிக்கா விமான விபத்து தொடர்பான விசாரணை முடிய ஓராண்டு ஆகலாம்

0 1152
அமெரிக்காவில் விமானம் தீப்பிடித்தது தொடர்பான விசாரணை முடிவதற்கு ஓராண்டுக்கும் மேல் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் விமானம் தீப்பிடித்தது தொடர்பான விசாரணை முடிவதற்கு ஓராண்டுக்கும் மேல் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுனெட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 777 விமானம் கடந்த சில தினங்களுக்கு முன் கொலராடோவில் இருந்து ஹவாய்க்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது அதன் வலது பக்க என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து அந்த விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த விமானத்தில் ப்ராட் அன்ட் விட்னி என்ற என்ஜின் பயன்படுத்தப்பட்டது.

விமானம் பறந்து கொண்டிருந்த போது ஏராளமான சிதைவுகள் குடியிருப்பு பகுதியில் விழுந்தன. இதையடுத்து தேசிய போக்குவரத்து வாரியம் விசாரணையை முன்னெடுத்தது.

இந்நிலையில் விசாரணை முடிய ஓராண்டுக்கு மேல் ஆகலாம் என்று தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments