கனடாவிலுள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை: ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!
கனடா நாட்டிலுள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும் எனவும், அதற்காக ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Comments