காஷ்மீரில் 11 மாதங்களுக்கு பின்னர் ரயில் சேவை தொடக்கம்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதினொரு மாதங்களுக்குப் பிறகு ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
கொரோனா தொற்று காரணமாக அங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரெயில் சேவைகள் நிறுத்திப்பட்டன. இந்நிலையில், பதினொரு மாதங்களுக்கு பிறகு ரயில்கள் மீண்டும் தொடங்கி உள்ளன. இதுகுறித்து ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விடுத்துள்ள அறிக்கையில், பனிகல்-பாரமுல்லா இடையே முதல் கட்டமாக ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றும், இது சுற்றுலாத்துறைக்கு ஊக்கமும் அளிக்கும் என்றும் கூறியுள்ளார். இனி மேலும் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments