80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலை தர இயலாது : உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மறுப்பு
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலை தர இயலாது என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 80 வயதுக்கு மேற்பட்டோர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டது. இதற்கு பதில் அளித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு தாக்கல் செய்த மனுவில், 80 வயதை கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பற்றிய தரவுகள் தனியாக திரட்டப்படுவதாகவும், இவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தபால் ஓட்டு போடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர்களது பெயர் விவரபட்டியலை முன்கூட்டியே வெளியிடுவது தனிப்பட்ட உரிமைக்கு மாறானது என்றும், அரசியல் கட்சிகளுக்கு இப்போது கொடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments