பள்ளி, கல்லூரி படிப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திட்டவட்டம்

0 4944
பள்ளி, கல்லூரி படிப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திட்டவட்டம்

ட்டப்படிப்பை மட்டுமின்றி பள்ளிக் கல்வியையும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது பள்ளியில் இருந்து தமிழ் வழியில் படிப்போருக்கு மட்டும் தான் என்றும், இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக பட்டப்படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்தோருக்கு வழங்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கிராமப்புற ஏழை மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் நிலையில், அவர்கள் பயண் பெறுவதற்காகவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் எனக்கூறி மனுவை  தள்ளுபடி  செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments