உ.பி.யில் குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொன்ற வழக்கு : சிபிஐ மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பெண் கோரிக்கை

0 1984

உத்தரப்பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கான தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை காதலனுடன் சேர்ந்து கோடாரியால் வெட்டிக் கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண், வழக்கை மீண்டும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அம்ரோகாவை சேர்ந்த ஷப்னம், அவரது காதலன் சலீம் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். ராம்பூர் சிறையில் இருக்கும் அந்த பெண்ணை, அவரது 12 வயதான மகன் ஞாயிறன்று சந்தித்துப் பேசினான்.

மாநில ஆளுநருக்கு ஷப்னம் கருணை மனு அனுப்பி உள்ள நிலையில், இந்த வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments