பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வருகிறாரா சீன அதிபர் ? வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் டெல்லி வருகிறார் என்று வெளியான செய்திகள் தவறு என்று டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக பிரிக்ஸ் மாநாடு எப்போது நடக்கும் உள்ளிட்ட முடிவுகள் இன்னும் எடுக்கப்படாத நிலையில் சீன அதிபர் வருவதாக வெளியான செய்தி ஆச்சரியம் அளிப்பதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முறை பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடப்பதற்கு சீனா ஆதரவு அளிக்கும் என பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் சீன செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments