மத்திய அரசு திட்ட பயனாளிகளின் கை ரேகைகளை குளோனிங் செய்து மோசடி - 6 பேர் கொண்ட கும்பல் கைது
கை ரேகைகளை குளோனிங் செய்வதை ஆன்லைனில் தெரிந்து கொண்டு, மத்திய அரசு திட்ட பயனாளிகளின் 500 வங்கி கணக்குகளை ஹேக் செய்து பணம் சுருட்டிய 6 பேர் கொண்ட கும்பல் உத்தரப்பிரதேசத்தில் சிக்கியுள்ளது.
முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றில் இணைந்துள்ள பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத்தை ரகசியமாக இவர்கள் திருடி வந்துள்ளனர்.
குளுகன் கருவியைப் பயன்படுத்தி ஒரு கை ரேகையைகுளோனிங் செய்வதற்கு 5 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும் என்று இந்த கும்பல் தெரிவித்துள்ளது.
பயோமெட்ரிக் தகவல்களை திருடுவது ஆதார், பொது வினியோகம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் அச்சுறுத்தல் என்பதால், இந்த கும்பலிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஷாஜகான்புர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments