மாநில அரசின் மொத்தக் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக இருக்கும் - இடைக்கால பட்ஜெட்டில் தகவல்
மாநில அரசின் மொத்தக் கடன் சுமை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் 2 லட்சத்து 18 ஆயிரத்து 991 கோடியாகவும், செலவு 2 லட்சத்து 60 ஆயிரத்து 409 கோடியாகவும் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை 41 ஆயிரத்து 417 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரி விகிதத்துடன் இணைக்கவும், மாநிலங்கள் தங்களது உரிய வருவாய் பங்கினை பெறுவதையும் மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் நிலுவையில் உள்ள மொத்தக் கடன் 5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடி ரூபாயாகவும், மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 26.69 சதவீதமாகவும் இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments