புதிய தனியுரிமை விதிமுறைகளை ஏற்குமாறு கட்டாயப்படுத்தும் வாட்ஸ் அப்
புதிய தனியுரிமைக் கொள்கை மே 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ் அப் கடந்த மாதம் தனியுரிமைக் கொள்கையை வெளியிட்டது. அதிலுள்ள புதிய விதிகளை ஏற்கவில்லை என்றால் வாட்ஸ் அப் சேவையை தொடரமுடியாது என்றும் தெரிவித்திருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், மே 15 ஆம் தேதிக்கு பிறகு 120 நாட்களுக்குள் பயனர்கள் புதிய தனியுரிமை விதிமுறைகளை ஏற்கவில்லை என்றால் பயனர்களின் கணக்கு நீக்கப்பட்டுவிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
Comments