பட்ஜெட்டை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து சில கருத்துக்களை பேச முற்பட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை.
இதனால் அவையில் துரைமுருகன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிறிது நேரம் நின்று கொண்டே இருந்தனர். ஆனாலும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால் பட்ஜெட் உரையை புறக்கணித்து துரைமுருகன் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதைத்தொடர்ந்து சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெளி நடப்பு செய்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அமைப்புகளும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் திமுக புறக்கணிக்கும் என்றார்.
இதே போல சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கரும் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.
Comments