பித்தளை குடத்தை வைத்து கோயில் இரிடிய கலசம் என கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது

0 1375
பித்தளை குடத்தை வைத்து கோயில் இரிடிய கலசம் என கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது

சென்னையில் போலி இரிடிய கலசத்தை கொடுத்து பண மோசடி செய்தவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய  5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடத்தப்பட்டவரையும் மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சாலிகிராமம் வேலாயுதம் காலனியைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் நியூட்டன் மற்றும் அவரது நண்பர் ரகுஜியை, கடந்த19 ஆம் தேதி கடத்திய ஒரு கும்பல் 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது.

இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரித்த போலீசார், கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்து இருவரையும் மீட்டனர்.

நியூட்டன் மற்றும் அவரது கூட்டாளி ரகுஜி ஆகிய இருவரும் பித்தளை குடத்தை கோயில் இரிடிய கலசம் என கூறி  57 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்ததால், அவர்கள் இருவரையும் மோசடி வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments