மொய்க்கு பதில் பெட்ரோல்... ஆபத்தை உணராமல் மணமக்களுக்கு பரிசலிக்கும் உறவினர்கள்
சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் ஆபத்தை உணராமல் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது.
வேலூர் பகுதியை சேர்ந்த முகமது ரகுபதின் என்பவருக்கும், கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியை சேர்ந்த ஜபசூம் நசியா என்பவருக்கும் சேலம் கோட்டை பகுதியில் திருமணம் நடைபெற்றது. மணமகளின் உறவினர் முகமது காசிம் என்பவர் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கிய நிலையில், மணமக்கள் அதை பெற்றுக் கொண்டனர்.
பெட்ரோல் போன்ற எரிபொருட்களை இப்படி காட்சிப் பொருளாக பயன்படுத்துவது தண்டனைக்கு உரிய குற்றமாகும். வீண் விளம்பரத்திற்காக இது போன்று பெட்ரோலை பயன்படுத்துவது தீ விபத்து போன்ற விபரீதத்திற்கு காரணமாகிவிடும் என்பதை தொடர்புடையவர்கள் உணர வேண்டும்.
Comments