சவுதி அரேபிய பெண்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் ராணுவத்தில் சேர அனுமதி

0 2093
பெண்கள் ராணுவத்தில் சேரலாம் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

பெண்கள் ராணுவத்தில் சேரலாம் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

ராணுவம், வான் பாதுகாப்பு, கடற்படை, ஏவுகணைப் படை மற்றும் ஆயுதப்படை மற்றும் மருத்துவ சேவைகளில் சேரலாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் 155 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேல் உயரம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை, குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி கல்வி, சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து இருக்கக் கூடாது உற்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments