மின் வாரியத்தில் 5,000 கேங்மேன் பணி இடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
மின் வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணி இடங்களை நிரப்பிக் கொள்ள தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தில் களப் பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணி தொடர்பாக 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு எதிராக ஒப்பந்த தொழிலாளர்களும், சில தொழிற்சங்கங்களும் தொடர்ந்த வழக்கு,தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட 70 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளதாக கூறிய அரசு வழக்கறிஞர் புதிதாக கேங்மேன்கள் நியமிக்கப்பட்டாலும், ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Comments