ஆயுத தளவாட உற்பத்தியில் நாடு தன்னிறைவை எட்ட தொடர் நடவடிக்கை-பிரதமர் மோடி
ஆயுத தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதோடு, ஏற்றுமதி நாடு என்ற பெருமையை இந்திய பெறும் வகையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீட்டை திறம்பட செயல்படுத்துவது குறித்த காணொலி கருத்தரங்கத்தில் பேசிய அவர், பல ஆண்டுகளாக இந்தியா ஆயுத ஏற்றுமதியில் ஈடுபட்டது என்றார். முதல் மற்றும் இரண்டாம் உலக போரின் போது இந்தியாவில் இருந்து வெடிமருந்தும், ஆயுதமும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானதாக கூறிய அவர், அதன் பின்னர் நிலைமை தலைகீழானது என்றார்.
உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாக இருப்பது பெருமைக்கு உரியது அல்ல என்ற அவர், இப்போது 100 வகையான ஆயுத தளவாட இறக்குமதிக்கு அரசு தடை விதித்து உள்ளதோடு, அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வழிவகை செய்து உள்ளது என்றார்.
பாதுகாப்பு துறையில் தனியாரை ஊக்கு வித்துள்ளதால் இப்போது 40 நாடுகளுக்கு இந்திய ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக கூறிய அவர், வரும் காலத்தில் ஆயுத உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டும் என்றார்.
Comments