மதுரையில் ஓடையைத் தூர்வாரும் போது மீட்கப்பட்ட மீனாட்சி அம்மன் சிலை
உசிலம்பட்டி அருகே, ஓடையைத் தூர்வாரும் போது நான்கரை கிலோ எடையிலான மீனாட்சி அம்மன் சிலை மீட்கப்பட்டது.
பிரவியம்பட்டி கிராமத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், ஓடையைத் தூர்வாருவதற்காக கம்பியால் மண்ணைத் தோண்டிய போது, வெண்கலத்தினால் ஆன மீனாட்சியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
ஒரு அடி உயரத்தில், மார்பளவு உடைந்த நிலையில் மீட்கப்பட்ட மீனாட்சியம்மன் சிலை உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Comments