நியூசிலாந்து கடற்கரையில் 49 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு
நியூசிலாந்து நாட்டின் கோல்டன் பே கடற்கரையில் 49 பைலட் வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின.
இதில் 9 திமிங்கிலங்கள் இறந்து விட்டதாக அந்நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாப்பு துறை கூறி உள்ள நிலையில், உயிருக்கு போராடி வரும் மீதமுள்ள 40 திமிங்கிலங்களை பாதுகாத்து, மீண்டும் அவற்றை கடலில் விடும் பணியில் 65 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Comments