புதுச்சேரியில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த திமுக எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன், திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெங்கடேசன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டதால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Comments