மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
இந்தியப் பங்குச்சந்தைகள் தொடக்கம் முதலே சரிவைச் சந்தித்த நிலையில், வணிகநேர முடிவில் சென்செக்ஸ் ஆயிரத்து 100 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாகப் பங்குச்சந்தைகள் இன்று தொடக்கம் முதலே சரிவைச் சந்தித்தன. அதன்பின் சரிவு அதிகமாகிக் கொண்டே சென்றது.
வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆயிரத்து 145 புள்ளிகள் சரிந்து 49 ஆயிரத்து 744 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை நிப்டி 306 புள்ளிகள் சரிந்து 14 ஆயிரத்து 676ஆக இருந்தது. மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிலவற்றின் பங்குகள் 4 விழுக்காட்டுக்கு மேல் வீழ்ச்சியடைந்தன.
Comments