முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவினர் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் கூட்டாக அறிக்கை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி, அதிமுகவினர் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக, இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 24-ம் தேதி மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி உறுதிமொழி ஏற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை வீழ்த்தி, நூற்றாண்டுகளுக்கும் கோட்டையில் கொடி பறக்கச் செய்வோம் என அதிமுக உறுதியேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments