கோலாவுக்கு செயற்கை பாதம் பொருத்தி அழகு பார்த்த செவிலியர்
உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவிலுள்ள கோலா ஒன்றுக்கு செயற்கை பாதம் பொருத்தப்பட்டது.
ட்ரையம்ப் என்ற பெயருடைய ஆண் கோலா, பின் வலது கால் ஊனத்துடன் பிறந்தது. பிறப்பிலேயே பாதம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டுவந்த ட்ரையம்ப்பை மீட்ட செவிலியர் மார்லி, அதற்கு செயற்கை பாதத்தை வடிவமைத்து பொருத்தினார்.
முதலில் செயற்கை பாதத்துடன் நடக்கவும், மரங்கள் ஏறவும் சிரமப்பட்ட ட்ரையம்ப் தற்போது அதனுடன் வாழ பழகிவிட்டதாக மார்லி கூறுகிறார்.
Comments