அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குச் சொந்தமாகச் சிதம்பரத்தில் உள்ள கடல்சார் அறிவியல் கல்லூரி முறையாக விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி அதன் அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் மாணவர்களுக்கு 50 விழுக்காடு கல்விக் கட்டணத்தைத் திருப்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லூரியை நடத்தும் அறக்கட்டளை சார்பில் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரிகரசுதன் என்கிற மாணவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மாணவர்களிடம் ஒன்றரைக் கோடி ரூபாய் மோசடி செய்ததற்காக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். இந்தக் கல்லூரியில் படித்ததால் தனது எதிர்காலம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் அதற்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.
Comments