தமிழக ரயில்வே பாதை இரண்டரை ஆண்டுகளில் மின்மயமாக்கப்படும் - அமைச்சர் பியூஷ் கோயல்

0 2156

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் முடிக்கப்பட்ட பல்வேறு ரயில்வே பணிகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தமிழகத்தில் ரயில்வே பணிகளை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் நடந்துள்ளன. இதனடிப்படையில், அம்பத்தூர், அரக்கோணம், எலாவூர், மாம்பலம், மேட்டுப்பாளையம், திருப்பூர், கங்கைகொண்டான், கடையநல்லூர், நாகர்கோவில் டவுன், வாஞ்சிமணியாச்சி என, 10 ரயில் நிலையங்களில் பயணியர் வசதிக்காக நடைமேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதேபோல் சென்னை எழும்பூர், மாம்பலம், தாம்பரம், திருவள்ளூர், ஈரோடு மற்றும் தஞ்சை ரயில் நிலையங்களில், நகரும் மின் ஏணிகளும் திறந்து வைக்கப்பட்டன. இவற்றை காணொலிக் காட்சி மூலம் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ரயில்வே தடங்கள் முற்றிலும் மின்மயமாக்குவதற்கான பணிகள் துரிதகதியில் நடந்து வருவதாகவும் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மொத்த கட்டமைப்பும் மின்மயமாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments