தமிழகம் முழுவதும் ரூ. 1117 கோடியில் 6,211 ஏரிகள் தூர் வாரப்பட்டுள்ளன - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 1347
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கபிலர்மலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கபிலர்மலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், பரமத்தி வேலூர் பகுதியில் 406 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படுகிறது என்றார்.

தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக உள்ளது என்றும் நீர்மேலாண்மை திட்டத்திற்காக தமிழகம் தேசிய விருது மற்றும் உள்ளாட்சித் துறையில் 143 விருதுகள் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஜேடர்பாளையத்தில் ராஜவாய்க்கால் வெட்டிய அல்லாள இளையநாயக்கருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது என்றும் ஒரு வார காலத்தில் மணி மண்டபம் திறக்கப்படும் என்றும் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டு மக்களை தான் பார்க்கும் என்றும் நாட்டு மக்களை பார்க்காது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் நிறைய அற்புதமான அறிவிப்புகள் வெளிவரும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments