தொழிலாளர் வைப்பு நிதி, தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் இணைக்கப்படாது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் இணைக்கும் எண்ணம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நடுத்தர மக்களில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதியை திருப்பி அளிப்பதில் உள்ள ஆறுதலைத் தம்மால் புரிந்து கொள்ள முடிவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் எந்த வங்கிகளை தனியார்மயமாக்குவது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Comments