காவிரி வைகை குண்டாறு இணைப்பு: ரூ. 6941 கோடி மதிப்பீட்டில் 118 கி.மீ. கால்வாய் வெட்டும் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக ஆறாயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி கால்வாய் வெட்டும் பணியைத் தொடக்கி வைத்தார்.
கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோமீட்டர் தொலைவுக்குக் கால்வாய் வெட்டும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குன்னத்தூரில் நடைபெற்ற பூமிபூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றுக் காவிரி - வெள்ளாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினர்.
அப்போது பேசிய முதலமைச்சர், நடந்தாய் வாழி காவேரி என்னும் பெயரில் தமிழக அரசு தெரிவித்த திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். நூறாண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை அதிமுக அரசு பத்தாண்டுகளில் செய்துள்ளதாக, நிகழ்ச்சியில் பேசிய துணைமுதலமைச்சர் தெரிவித்தார்.
Comments