சென்னை மெட்ரோ ரயில் கட்டணக் குறைப்பு: இன்று முதல் அமல்: பயணிகள் மகிழ்ச்சி!

0 3953
சென்னை மெட்ரோ ரயில் கட்டணக் குறைப்பு: இன்று முதல் அமல்: பயணிகள் மகிழ்ச்சி!

சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதிகபட்சக் கட்டணமாக 70 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், கட்டணங்கள் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில்களில் புதிய கட்டண விவரங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

டோக்கன் முறையில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக இருந்த 70 கட்டணம் 50 ரூபாயாக  குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் பயண அட்டை மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு பத்து சதவீதமும், கியூஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments