புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி: பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடக்கி வைத்தார். அதில் மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பற்றி நிர்வாகிகள் கலந்துரையாடினர்.
ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் பற்றி விவாதித்துள்ள நிலையில் மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் பாஜக வெற்றிபெறும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Comments