திமுக ஆட்சி மீண்டும் மலரும் : மு.க. ஸ்டாலின் நம்பிக்கை

0 4103
தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற "உங்கள் தொகுதியில் ஸ்டாலின் " என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், மிக விரைவில் இது சாத்தியமாகும் என்றார்.

தமிழகத்தில் ஒரு கோடி இளைஞர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதாக கூறிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்தார். 

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் சிறப்பு பெற்றுள்ள சாதனையாளர்களை, மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி கெளரவப்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments