"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சர்வதேச சந்தையில் எரிபொருள் உற்பத்தி குறைவால், அதன் விலை உயர்வு -மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
சர்வதேச சந்தையில் எரிபொருள் உற்பத்தி குறைந்ததால், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அசாம் மாநிலத்தில் உள்ள சிலபதாரில் பேட்டியளித்த அவர், அதிக லாபம் ஈட்டுவதற்கு, குறைந்த அளவில் எரிபொருளை எண்ணெய் வள நாடுகள் உற்பத்தி செய்வதாக குற்றஞ்சாட்டினார்.
கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததால் இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் பாதிப்புக்குள்ளாவதாகவும் தர்மேந்திர பிரதான் கவலை தெரிவித்தார்.
நிதி ஆதராங்களை, வரி வருவாய் உள்ளிட்டவற்றின் மூலம் திரட்ட வேண்டிய பொறுப்பும், தங்களுக்கு உள்ளதாக, தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
Comments