ஆசியாவின் பிரமாண்டமான கால்நடைப் பூங்காவை தலைவாசலில் நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ள கால்நடைப் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர், 118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் 5ஆவது கால்நடை மருத்துவக் கல்லூரியையும் அர்ப்பணிக்கிறார்.
கல்லூரிக்கான நிர்வாக அலுவலக கட்டிடம் , கல்விசார் வளாகம், நூலக கட்டிடம் மற்றும் விடுதி, கால்நடை பண்ணை வளாகம், கால்நடை மருத்துவமனை என 3.75 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த விழாவில் பல்வேறு துறை சார்பில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.
Comments