சென்னையில் 5ஆவது நாளாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
'மாற்றுத்திறனாளிகள் அரசாணை -2016' நிறைவேற்றப்படாததை கண்டித்து பார்வைக் குறைபாடு மாற்றுத்திறனாளிகள் அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன்பு 5ஆவது நாளாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வையற்றோருக்கு பணியிடங்களை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
Comments