புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா

0 3726
புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா

புதுச்சேரி சட்டபேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரசை சேர்ந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான் குமார் ஆகியோர் ஏற்கனவே தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.

இந்த நிலையில், ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணனும், தனது பதவியை ராஜினமா செய்வதாக சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கடிதம் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 9ஆக குறைந்துள்ளது.

3 திமுக எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ என பேரவையில் கூட்டணியின் பலம் 13 ஆக இருக்கிறது.

நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்திருப்பது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments