புனேவில் கொரோனா பரவல் அதிகரிப்பதன் எதிரொலி: பள்ளி, கல்லூரிகள் வரும் 28 ஆம் தேதி வரை மூடல்!

0 3950
புனேவில் கொரோனா பரவல் அதிகரிப்பதன் எதிரொலி: பள்ளி, கல்லூரிகள் வரும் 28 வரை மூடல்!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் 28 ஆம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது புனே மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் 5 சதவிகிதமாக இருந்த தொற்று பரவல் இப்பொது இரு மடங்காக உயர்ந்துள்ளது. முன்னர் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் அடுத்த 3 மாதங்களுக்கு இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் தற்காப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

அதன்படி உணவு விடுதிகளும், ஹோட்டல்களும், பார்களும் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். நாளையில் இருந்து இரவு 11 மணி முதல் காலை 6 மணிவரை கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments