நாகாலாந்து சட்டப்பேரவையில் 58ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பாடப்பட்ட தேசிய கீதம்
நாகாலாந்து சட்டப் பேரவையில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது.
1963-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட பிறது தற்போது தான் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை தொடங்குவதற்கு முன்பு அவையில் தேசிய கீதம் பாடப்பட்டது.
முதலமைச்சர் Neiphiu Rio உள்பட அவை உறுப்பினர்கள் அனைவரும் முக கவசம் அணிந்த நிலையில் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினர்.
Comments