டெக்ஸாஸ் மாகாண பனிப்பொழிவை பெரும் பேரழிவு என அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
டெக்ஸாஸ் மாகாணத்தில் பெய்து வரும் பனிப்பொழிவை பெரும் பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
டெக்ஸாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் அனைத்தும் உறைந்து விட்டதால் அப்பகுதியில் 13 மில்லியன் மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடரும் பனிப்பொழிவால் இதுவரை 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால் மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், கடும் குளிரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் உதவி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments