இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே 12 மணி நேரம் நீடித்த 10வது சுற்றுப் பேச்சுவார்த்தை
கிழக்கு லடாக் எல்லையின் பாங் கோங் ஏரி மற்றும் ஃபிங்கர் 4 மலைப்பகுதி போன்ற இடங்களில் இருந்து சீனப்படைகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் இதர பகுதிகளான கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், டெம்சோக் ஆகிய இடங்களில் உள்ள படைகளையும் விரைவாக விலக்கிக் கொள்ளுமாறு சீனாவிடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பத்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இந்திய வீரர்களின் எல்லைப் பாதுகாப்பு ரோந்துப் பணிகளை சீனப்படை வீரர்கள் தடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காலையில் 10 மணிக்குத் தொடங்கிய இப்பேச்சுவார்த்தை சுமார் 12 மணி நேரம் நீடித்தது. இரவு பத்து மணியளவில் பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றன.இதனிடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக தேசிய ஆலோசகர் அஜித் தோவலும் சீன அதிகாரிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments