ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அ.தி.மு.க சார்பில் 24 ஆம் தேதி முதல் 4 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு

0 2977
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அந்த கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அந்த கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 24 ஆம் தேதி முதல் 4 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுமென கூறப்பட்டுள்ளது.

இதில் 24 ஆம் தேதி போடிநாயக்கனூரில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், சென்னை ஆர்.கே.நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பேசுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் கூட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் பேசுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments