துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து விமானத்தில் செல்ல அனுமதி

0 1594
துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

போபாலில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க மனு பாக்கர் துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவற்றைப் பையில் எடுத்துக்கொண்டு டெல்லி விமான நிலையத்துக்குச் சென்றார்.

துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதி பெற்றுள்ளாரா எனக் கேட்ட ஏர் இந்தியா அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். அனுமதி பெற்றுள்ளதாக மனு பாக்கர் தெரிவித்தும் அவரை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை.

இதனால் பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் இதைத் தெரிவித்து முறையிட்டார். அமைச்சர் கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து போபாலுக்கு விமானத்தில் செல்ல மனு பாக்கர் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments