"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மகாராஷ்டிரா லசால்கான் சந்தையில் வெங்காயம் விலை ஒரு குவிண்டால் ரூ4,500க்கு விற்பனை
மகாராஷ்டிரத்தின் லசால்கான் சந்தையில் வெங்காயம் விலை ஒரு குவிண்டால் நாலாயிரத்து ஐந்நூறு ரூபாயை எட்டியுள்ளது.
நாசிக் மாவட்டத்தில் லசால்கானில் உள்ள வெங்காயச் சந்தை நாட்டிலேயே மிகப் பெரியதாகும். இங்குச் சராசரியாக ஒரு நாளைக்கு 22 ஆயிரம் குவிண்டால் முதல் 25 ஆயிரம் குவிண்டால் வரை வெங்காயம் வரத்து இருக்கும்.
பருவம் தவறிப் பெய்யும் மழையால் வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரு வாரங்களாக வெங்காயம் வரத்துக் குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி ஒரு குவிண்டால் வெங்காயம் மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் முதல் நாலாயிரத்து ஐந்நூறு ரூபாய் வரை விற்பதாகவும், வரும் நாட்களில் விலை மேலும் உயரும் என்றும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments